Saturday, March 31, 2012

அழகு படுத்துதல்

அழகு படுத்துதல் ஒரு கலை. அழகு படுத்துதலும் வசதி படுத்துதலும் நிச்சயமாக கிரியேடிவிட்டியின் ஒரு வகை. அது ஒரு திறமை. வழக்கமாக கடைபிடிக்கப்படும் வழிமுறைகளை தாண்டி ஒன்றை அழகு படுத்துவதுதான்  டிரென்ட் செட்டர் எனப்படுகிறது. அது மிகவும் அழகாக இருக்கும்போது உனக்கான ஒரு தீராத கூட்டம் உருவாகிறது. இட் இஸ் எ வே ஆப் அற்றேஞ்சிங். ஆகவே எதையும் அழாகாக செய்ய கற்றுக்கொள். வசதி படுத்த கற்றுக்கொள். அழகை விரும்பாதவர்கள் மிகவும் குறைவு இவ்வுலகில். அழகாக இருக்க வேண்டும் என்பவர்களை அசிங்க படுத்தாதே! கற்றுக்கொள்!! உனக்கு தோணுவது போல் அழகு படுத்து. குறைந்த செலவில் அழகு படுத்துவது என்பதை கற்றுக்கொள். எதையும் எளிமையாக்கி அழகு படுத்தும்போது உலகம் உன் அடிமையாகும்.
அதனால்தான் பல நேர்முக தேர்வுகளில், இந்த அறையை எப்படி அழகாக மாற்றியமைக்கலாம் என கேள்விகள் கேட்டோ அல்லது தேர்வுக்காக காத்திருக்கும் சமயத்தில் அந்த அறையை   அழகு படுத்துதலில் ஈடுபடும் கேண்டிடேட் தேர்ந்தெடுக்கப் படுவதாக படித்திருக்கின்றோம்.
என்னுடைய அனுபவத்தில் ஜப்பானியர்கள் அழகு படுத்துவதில் கைதேர்ந்தவர்கள் என்றே கருதுகிறேன். அதானால்தான் கண்டுபிடிப்புகள் என்னவோ அமெரிக்காவாக இருந்தாலும் அதனை மேலும் அழகுபடுத்தி வசதிபடுத்தி உலகத்தை தங்கள் கைகளுக்குள் ஜப்பானியர்கள் அடக்கினார்கள். உலக மார்க்கெட்டை தங்கள் வசம் கொண்டு வந்தார்கள்.
இப்படித்தான் என்று அல்ல. உன் விருப்பம்போல் அழகுபடுத்து. அது ஒரு புதிய கண்டுபிடிப்பாக கூட பார்க்கப்படலாம். ஒரு புதிய சகாப்தத்தை உருவாக்கலாம். ஒரு ஐபோன் எப்படி உலகத்தை திரும்பி பார்க்க வைத்து சாம்சுங் போன்ற மற்ற மாடல்கள் வந்த போதும் முதலிடத்தில் இருப்பதாக நினைக்கின்றீர்கள்? அதன் அழகு. அதன் செயல் திறனையும் தாண்டி அதன் அழகு. எத்தனை தடவை அதனை திருப்பி திருப்பி அதன் அழகை ரசித்திருப்பீர்கள்! செய்ததையே செய்யாமல், எளிமையில் அழகை புகுத்தியது அதன் வெற்றிக்கு காரணம்.

Friday, March 30, 2012

Howto add/delete IPv6 address in FreeBSD

To add:
# ifconfig {interface-name} inet6 {IPv6-Address} prefixlen {routed-bit}
# ifconfig le0 inet6 001:470:1e04:5ea::10 prefixlen 64


To delete:
# ifconfig em0 inet6 2001:db8:bdbd::123/48 delete