Showing posts with label ஜாலி. Show all posts
Showing posts with label ஜாலி. Show all posts

Monday, April 30, 2012

மழலைக் கவிதைகள்

ஹைக்கூ

வெட்டும் நகத்திலும்
களையும் தாடி முடியிலும்
ஒரு வலி.
என் பிஞ்சுக் குழந்தையை பிரிந்து
தொலைதூரத்தில் நான்.

 

ஒன்று சொல்லுங்களேன்!

"அம்மா!.. அம்மா!!"
"அப்பா!..அப்பா!!"
"ஒன்று சொல்லுங்களேன்!"
"எது முதலில் வந்தது..!?
பெற்றோர் 'பிள்ளைகள் காப்பக'த்தை
தேடியதா? அல்லது, பிள்ளைகள்
'முதியோர் இல்ல'த்தை தேடியதா?"

நான் கேட்டேனா?

பிஞ்சு பேசியது அதியசமாய்.
"அம்மா! அம்மா!! என்னை
விட்டுட்டு போகாதீங்க!"
"ஆயாவிடம் சமத்தாய் இருடா, செல்லம்!
அம்மா உனக்காகத்தான் சம்பாதிக்கப்
போகிறேன்" - அம்மாவின் குரல்.
"நான் கேட்டேனா?" - இது பிஞ்சு.

Sunday, April 29, 2012

சும்மா இருங்கள்!

உங்களால் சும்மா இருக்க முடிகிறதா? நீங்கள் நிச்சயமாக வாழ்வில் வெற்றி பெறுவீர்கள்.

நான் தினமும் குறைந்தது இருபது தடவைகள் இன்டர்நெட்டில் நியூஸ் பார்த்து விடுவேன். ஏதாவது செய்ய வேண்டுமென்றால், உடனே எங்கேவாவது ஏதாவது செய்திகள் புதிப்பிக்கப் பட்டுள்ளனவா என்று தேடி தேடி செய்திகளை படிப்பதுதான் ஒரே மன ஆறுதல். அது மனஅழுத்தத்தை குறைப்பதற்கு பதில், என்னை மனதளவிலும் உடலளவிலும் சோர்வடைய செய்வதையே நாளடைவில் உணர்ந்தேன். காலணா பிரயோசனமில்லை என்றாலும் எதற்கு அந்த செய்திகளை தேடி தேடி படிக்க வேண்டும் என்று தோன்றியது? என்னை அறியாமலேயே நான் அதில் அடிமையாகி விட்டதை உணர்ந்தேன். இப்படித்தானே குடிகாரர்களும் புகைப்பவர்களும். அவர்கள் குடிக்க செல்லும் நேரத்தில் அல்லது புகை பிடிக்க செல்லும் நேரத்தில் சும்மா கொட்டாவி விட்டுக் கொண்டு படுத்து கிடந்தால் பிரச்சினையே இல்லைதானே? ஏன் சும்மா இருக்க முடியவில்லை? சும்மா இருப்பது அவ்வளவு கடினமா? கண்டிப்பாக. குரங்கு மனதை வைத்துக் கொண்டு, சும்மா இருப்பது கடினம்தான்.

எனக்கு பயன்படாதவற்றை செய்யத் தோன்றும் நேரத்தில், சும்மா இருப்பதாக முடிவெடுத்தேன். தற்போது செய்திகளை காலையில் ஒரு தடவை மட்டும் படிக்கிறேன். யாரைப் பற்றியோ செய்திகளை அதற்கு மேல் படிப்பதில் எனக்கென்ன பிரயோசனம்? சும்மா படுக்கும் நேரத்தில், நான் செய்வதற்காக காத்திருக்கும் எத்தனையோ வேலைகள் என் கண் முன்னே வருகின்றன. எனக்குத் தேவையான தொழில்நுட்பம் சம்பந்தமான செய்திகளை அதிகளவில் படிக்கக் கற்றுக் கொண்டேன். தேவையில்லா குப்பைகளை ஒதுக்கித் தள்ளியதால் தேவையானவற்றை சேர்த்துக் கொள்ள என் மூளையில் நிறைய இடம் கிடைத்துள்ளது. அப்துல் கலாம் சொல்கிறார். "நான் திரைப்படங்களை பார்ப்பதே இல்லை. அதனால் நான் இழந்தது ஒன்றுமே இல்லை".

இந்த இளம் ஞானியை பாருங்கள்! ஸ்ரீ ரமண மகரிஷி! அவர் சும்மா இருந்தார். சும்மா இருப்பது அவ்வளவு கடினம்.


Saturday, April 21, 2012

http://www.tubetamil.com/entertainment-videos/wedding/%E0%AE%87%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D.html

Friday, April 20, 2012

Why High end technologies do not fit for Indians?

They do not stop talking on mobile phones till air hostess personally warns. Almost all mobile phones will ring immediately after the flight landed irrespective of the pilot's warning.

You can see the latest induction stove in almost all houses, but they have increased the power shortage too, around 6 hours power-cut per day.

AC buses in India got fire more frequently than ordinary buses, with severe casualties than the ordinary ones.

Construction of medians and fly-overs spoils the road more, and results much more chaotic.

If you happen to go to bank, you can see there will be Token Display, but repaired long before.

Why does the traffic policeman/policewoman need to stand in automatic traffic signals? If there is an policeman/policewoman, why are the automatic traffic signals needed? And, the automatic traffic signals rests on holidays.


Thursday, April 19, 2012

எதற்கு உனக்கு வேலை வேண்டும்?

எதற்கு ஒரு வேலையே தேடி ஓடுகிறாய்? அடுத்தவன் கொடுக்கும் ஒரு வேலையே செய்யத் தெரிந்த உனக்கு தானாகவே ஒரு வேலையே செய்யத் தெரியாதா? அதற்குத் லேட்டஸ்ட் தொழில்நுட்பம் தெரிந்திருக்க வேண்டுமா? சொல்லிக் கொடுத்திருக்க வேண்டிய கல்லூரிகள் சொல்லித் தரவில்லையா? அல்லது, தொழில்நுட்பத்தை சொல்லித் தந்தாலும், தானாக தொழில் தொடங்குவதை ஊக்குவித்திருக்க மாட்டார்கள். வேலை கிடைத்து விட்டதா என்றுதான் கேட்பார்களே ஒழிய, வேலை தொடங்கி விட்டாயா என்று யார்தான் கேட்பார்கள். நீயாக ஒரு வேலையை செய்யக் கற்றுக் கொடுக்காத படிப்புக்கு பெயர் ப்ரொபெஷனல் படிப்பா? தொழில்நுட்பம் வேண்டுமானால் வா.. நான் கற்றுத் தருகிறேன். போய் தொழிலை ஆரம்பி.
வேலை கிடைக்கவில்லை என்று மட்டும் வராதே. அசையத் தெரிந்த அனைத்திற்கும் இப்புவியில் வேலை உள்ளது. "வேலை இல்லை" என்றால் "உனக்கு ஒன்றுமே செய்யத் தெரியாது" என்று அர்த்தம். உனக்கு என்னதான் செய்யத் தெரியும்? அதை செய்.. போ.
கற்பி ! ஒன்றுசேர் !! புரட்சிசெய்  !!! என்பது எல்லாவற்றுக்கும் பொருந்தும்.

பெற்றோர்களே! உங்கள் குழந்தைகளுக்கு சிறு வயதிலிருந்தே நிறைய வேலை கொடுங்கள். அல்லது, நிறைய வேலைகளை செய்ய கற்றுக் கொடுங்கள். எந்தக் குழந்தையை பார்த்தாலும் "உனக்கு என்ன செய்யத் தெரியும்?", "ஓய்வு நேரங்களில் என்ன செய்கிறாய்?" எனக் கேட்க பழகிக் கொள்ளுங்கள். "எனக்கு நன்றாக பாடத் தெரியும்", "நான் நன்றாக விளையாடுவேன்", "நான் நன்கு மரம் ஏறுவேன்", "ஓய்வு நேரங்களில் செடி வளர்க்கிறேன்", "என் பெற்றோர்களுக்கு உதவி செய்வேன்", "நான் நன்றாக சமைப்பேன்" என எது வேண்டுமானாலும் பரவாயில்லை. ஒவ்வொரு பருவத்திலும் வயதுக்கேற்ற இரண்டு, மூன்று வேலைகளை செய்ய அவர்கள் பக்குவப் பட்டிருக்க வேண்டும். இயற்கையாகவே அவர்களுக்கு எதில் நாட்டம் இருக்கிறது? எதில் திறமை இருக்கிறது? என்று பாருங்கள். அதில் அவர்களை பிரகாசிக்க விடுங்கள். தொழில்களுக்குள் பேதம் புகுத்துவது நீங்களே. சிறு வயதிலிருந்தே நம் பிள்ளை என்னென்ன செய்யப் போகிறான் என சிந்தியுங்கள். படிப்படியாக நீங்கள் சிந்திப்பதை நிறுத்திக் கொண்டு அவர்களை சிந்திக்க விடுங்கள். அவர்களுக்கு அந்த சுதந்திரத்தை கொடுங்கள். உயர்கல்வி முடித்த பிறகு திடீரென்று ஒருநாள் உட்கார்ந்து நம் பிள்ளை என்ன படிக்க வேண்டும் என யோசிக்காதீர்கள். படித்து முடித்தவுடன் இன்னும் வேலை தேடிக் கொண்டிருக்கிறான் என்று சொல்லாதீர்கள். கம்ப்யூட்டர் படித்து விட்டு வேலை தேடிக் கொண்டிருக்கும் ஒரு பிள்ளையை விட, முறையாக விவசாயம் செய்து அழகாக வாழ்ந்து கொண்டிருக்கும் ஒரு பிள்ளைதான் முறையாக வழிநடத்தப் பட்டிருக்கிறான்.

அதுபோல் படிப்பு என்பது வெறும் புத்தகப் படிப்பு மட்டும் போதாது. அன்றாட நிகழ்வுகள் பற்றிய பொது அறிவு, வார, மாத பத்திரிக்கைகள் மூலம் அறியக்கூடிய பொது அறிவு, பிற மொழித்திறன் முதலியவையும் மிக அவசியம். பிற்காலத்தில் ஒன்றை விட்டால் மற்றொன்றை பிடிக்கக் கூடிய ஆற்றலும், துணிச்சலும், தன்னம்பிக்கையும் இருப்பது மிக அவசியம். அதனால் பெற்றோர்கள் குழந்தைகளின் கற்றலில் தங்களையும் ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும். தரமற்ற ஊடகங்கள் மலிந்து விட்ட இக்காலத்தில், குழந்தைகளுக்குத் தேவையான செய்திகளை சேகரித்து அவர்களுக்கு அறியத் தருவது, பொது நிகழ்ச்சிகளுக்கு அழைத்துச் செல்வது, தரமான பத்திரிக்கைகளை படிக்க ஊக்கமூட்டுவது, எந்தந்த துறைகளில் சாதிக்க என்னென்ன செய்வது என்பது பற்றிய அறிவை வளர்த்துக் கொள்வது, சாதகமான இரண்டு மூன்று துறைகளை தேர்ந்தெடுத்துக் கொண்டு, அவற்றை நோக்கி குழந்தைகளை வழி நடத்துவது முதலியவை அவற்றில் அடங்கும். இந்த செயல்திட்டத்தில் குழந்தைகளை சக நண்பனாக இருந்து வழிநடத்த வேண்டுமே தவிர, அவர்களை திட்டுவதோ அடிப்பதோ கூடாது. அதே சமயம், குறிப்பிட்ட இடைவெளிகளில் அவர்களுடைய வளர்ச்சியை கண்காணிப்பது, எல்லாவற்றிலும் அவர்களுடைய கவனம் இருக்குமாறு, தினந்தோறும் அவர்களுடைய நேரத்தை பிரித்துக் கொடுத்து ஊக்கப் படுத்துவது மிக அவசியம். தேர்வுக்கு முதல் நாள் அமர்ந்து அவர்களை சோதிப்பது என்பது உங்களுடைய குறைபாடையே காட்டும்.

நான் தஞ்சாவூரில் படிக்கும் பொழுது தங்கியிருந்த வீட்டில் எங்கு பார்த்தாலும் மணிவேலைப்பாடுகளுடன் கூடிய அழகிய பொருட்களை பார்க்கலாம். அனைத்தும் அந்த முதலாளி அம்மா செய்தவை. வேலை முடித்த மதிய நேரங்களில் எப்பொழுதும் கையில் ஊசி, நூல், மணிகள், சுவெட்டர்களுடன் அவர்களை பார்க்கலாம். உயர்ந்த அரசுப் பணியில் இருந்து ஓய்வுப் பெற்ற முதலாளி அய்யா ஓய்வு நேரங்களில் தச்சுத் தொழிலில் ஈடுப்பட்டிருப்பதைப் பார்க்கலாம். சமீபத்தில் நான் படித்த ஒரு கட்டுரையில் "இந்தியாவில் உபயோகமான பொழுதுப் போக்கு என்பது மிகவும் குறைவு. இதனால் அவர்கள் இழக்கும் தொழில்நுட்ப அறிவு மிக அதிகம். நான் தற்போது செய்து கொண்டிருக்கும் இந்த தொழில் முழுக்க முழுக்க என்னுடைய பொழுதுப் போக்கிலிருந்து வந்தது. நான் சிறு வயதிலிருந்தே மின்னணுவியலில் மூழ்கியிருந்தேன். எனக்குத் தெரிந்த வல்லுனர்கள் கல்லூரி வயதிற்கு முன்பிருந்தே அந்த துறைகளை கரைத்துக் குடித்திருந்தார்கள். புகழ்பெற்ற பொறியாளர் ஜிம்மி வில்லியம்ஸ் பற்றித் தெரியுமா? அவர் உயர் கல்வி படிக்கும்பொழுது மின்னனுவியலைப் பற்றி தெரிந்து கொள்ள டிவி கடையில் வேலை பார்த்தார். மேலும் தான் வேலைக்கு செல்லும் காலம் முழுதும் கூட தன்னுடைய வீட்டில் அதற்கான அறையை ஒதுக்கி தன்னுடைய முயற்சியை தொடர்ந்தார்" என்று கூறப்பட்டுள்ளது. ஆக்கப்பூர்வமான, அதாவது, ஓய்வு நேரங்களில் அறிவை வளர்க்ககூடிய, ஆரோக்கியத்தை வளர்க்கக்கூடிய, வருமானத்தை வளர்க்கக்கூடிய, தனது கலைத்திறனை வெளிப்படுத்தக் கூடிய, தனது திறமைகளை பயன்படுத்தும் வகையில், தனது திறமைகளை வளர்த்துக்கொள்ளும் வகையில் பொழுதுப் போக்கை வளர்த்துக் கொள்ளுங்கள்.



ஏன் கம்ப்யூட்டர் தொழில் அடிக்கடி அடி வாங்குகிறது?

ஏனென்றால், கம்ப்யூட்டர் உலகத்தில் எதுவுமே உண்மையானவை அல்ல. எப்பொழுதெல்லாம் பெரும்பாலான மனிதர்கள் உண்மையானவற்றை நோக்கி ஓடுகிறார்களோ அப்பொழுதெல்லாம் கம்ப்யூட்டர் தொழில் அடி வாங்குவதாக செய்தி வரும்.  அதானால்தான் அதற்கு "சைபர்" வேல்ட் எனப் பெயர் வைத்தான். கம்ப்யுட்டரில் அப்லோட் செய்யும் போட்டோக்களில் உள்ள சிரிப்புக்கள் போலி. இவன் அனுப்பும் ஸ்மைலி போலி. இவன் உம்மென்று அமர்ந்து கொண்டு ஸ்மைலி அனுப்புகிறான். போட்டோ எடுப்பது தெரிந்ததுமே ஒருவன் சிரிப்பு போலியாகி விடுகிறது.

ஆறாவது நிலம்

தமிழருக்கு ஐந்து வகை நிலங்கள் இருந்தன.
கடலும் கடல் சார்ந்த இடமும் - நெய்தல்
உழவும் உழவு சார்ந்த இடமும் - மருதம்
மலையும் மலை சார்ந்த இடமும் - குறிஞ்சி
காடும் காடு சார்ந்த இடமும் - முல்லை
மணலும் மணல் சார்ந்த இடமும் - பாலை
அதுபோல் தற்போது ஆறாவது நிலம் ஒன்று உள்ளது. வேலையும் வேலை சார்ந்த இடமும். அதுதான் ஜப்பான். வாழ்க்கை முழுதும் அங்கேயே. உண்டு, உறங்கி, இத்யாதி, இத்யாதி...