Sunday, April 29, 2012

சும்மா இருங்கள்!

உங்களால் சும்மா இருக்க முடிகிறதா? நீங்கள் நிச்சயமாக வாழ்வில் வெற்றி பெறுவீர்கள்.

நான் தினமும் குறைந்தது இருபது தடவைகள் இன்டர்நெட்டில் நியூஸ் பார்த்து விடுவேன். ஏதாவது செய்ய வேண்டுமென்றால், உடனே எங்கேவாவது ஏதாவது செய்திகள் புதிப்பிக்கப் பட்டுள்ளனவா என்று தேடி தேடி செய்திகளை படிப்பதுதான் ஒரே மன ஆறுதல். அது மனஅழுத்தத்தை குறைப்பதற்கு பதில், என்னை மனதளவிலும் உடலளவிலும் சோர்வடைய செய்வதையே நாளடைவில் உணர்ந்தேன். காலணா பிரயோசனமில்லை என்றாலும் எதற்கு அந்த செய்திகளை தேடி தேடி படிக்க வேண்டும் என்று தோன்றியது? என்னை அறியாமலேயே நான் அதில் அடிமையாகி விட்டதை உணர்ந்தேன். இப்படித்தானே குடிகாரர்களும் புகைப்பவர்களும். அவர்கள் குடிக்க செல்லும் நேரத்தில் அல்லது புகை பிடிக்க செல்லும் நேரத்தில் சும்மா கொட்டாவி விட்டுக் கொண்டு படுத்து கிடந்தால் பிரச்சினையே இல்லைதானே? ஏன் சும்மா இருக்க முடியவில்லை? சும்மா இருப்பது அவ்வளவு கடினமா? கண்டிப்பாக. குரங்கு மனதை வைத்துக் கொண்டு, சும்மா இருப்பது கடினம்தான்.

எனக்கு பயன்படாதவற்றை செய்யத் தோன்றும் நேரத்தில், சும்மா இருப்பதாக முடிவெடுத்தேன். தற்போது செய்திகளை காலையில் ஒரு தடவை மட்டும் படிக்கிறேன். யாரைப் பற்றியோ செய்திகளை அதற்கு மேல் படிப்பதில் எனக்கென்ன பிரயோசனம்? சும்மா படுக்கும் நேரத்தில், நான் செய்வதற்காக காத்திருக்கும் எத்தனையோ வேலைகள் என் கண் முன்னே வருகின்றன. எனக்குத் தேவையான தொழில்நுட்பம் சம்பந்தமான செய்திகளை அதிகளவில் படிக்கக் கற்றுக் கொண்டேன். தேவையில்லா குப்பைகளை ஒதுக்கித் தள்ளியதால் தேவையானவற்றை சேர்த்துக் கொள்ள என் மூளையில் நிறைய இடம் கிடைத்துள்ளது. அப்துல் கலாம் சொல்கிறார். "நான் திரைப்படங்களை பார்ப்பதே இல்லை. அதனால் நான் இழந்தது ஒன்றுமே இல்லை".

இந்த இளம் ஞானியை பாருங்கள்! ஸ்ரீ ரமண மகரிஷி! அவர் சும்மா இருந்தார். சும்மா இருப்பது அவ்வளவு கடினம்.


No comments:

Post a Comment