கூலான வீடு கட்டுவது எப்படி?
- High ceiling: வீட்டின் கூரையை நன்றாக உயர்த்திக் கட்டுங்கள். அளவு:(ஆராய்ச்சி தொடருகிறது)
- மேற்கூரையின் அடியில் காற்று வெளியேற வசதியாக அதிக அளவில் ஓட்டை வையுங்கள். ஒரு அறைக்கு குறைந்தது இரண்டு அல்லது மூன்று காற்று வெளியேற்று கருவிகளை பொருத்தினால்(Exhaust Fans), கூரைக்கு அடியில் உள்ள சூடான காற்றை வெளியேற்றி குளிர்ந்த காற்று ஜன்னல் வழியாக அறைக்குள் நுழைய ஏதுவாகும்.
- மதிய வெய்யில் சுவர்களில் படாதபடி, வீட்டின் திசையை பொருத்து, வீட்டின் மேற்கூரையை வெளியில் நீட்டுங்கள். வீடு கட்டுவதற்கு முன்னால், சுமார் 11 மணியிலிருந்து நான்கு மணி வரை எந்த அளவுக்கு சூரியன் சாய்வாக எந்த திசையில் விழுகிறது? எந்த அளவுக்கு வெளியில் நீட்ட வேண்டும் என்று கணக்கெடுத்துக் கொள்ளுங்கள்.
- வீட்டின் வெளிப்புற பூச்சு, சூரிய ஒளியை பிரதிபலிக்கும் வண்ணம், மிகவும் லைட்டான வண்ணங்களில் இருக்கவும். வெள்ளை மிகவும் நல்லது.
- முடிந்த அளவுக்கு, வீட்டின் குறுக்கு நெடுக்காக நான்கு திசைகளிலும் ஜன்னல்களை அமையுங்கள். வீட்டின் குறுக்கே காற்றோட்டத்தை அதிகப்படுத்தி, கூலாக வைத்திருக்க உதவும்.
- வீட்டின் வெளியே சூரிய ஒளி அதிகம் விழும் திசையில், மாடிப்படி, வாகனங்கள் நிறுத்தும் கொட்டகை முதலியவற்றை அமைத்துக் கொள்ளுங்கள். நீங்கள் வசிக்கும் இடத்தை கூலாக வைத்துக் கொள்ள உதவும்.
- வீட்டின் மேற்கூரை திறந்த வெளியில் இருக்குமாயின், சனல் சாக்குப் பைகளை விரித்து, காலையும் மாலையும் தண்ணீர் விடுங்கள். உங்கள் வீட்டுக்கூரை வெப்பத்தை உறிஞ்சுவதை தடுக்கும்.
- வீட்டின் உட்புறம், அதிகளவு வெப்பத்தை உறிஞ்சும் செங்கல் மற்றும் கான்க்ரிட் சுவர்களை அமைத்துக் கொண்டு, வெளிப்புறம் வெப்பத்தை உறிஞ்சாத சுவர்களை அமைத்துக்கொள்ளுங்கள். (ஆராய்ச்சி தொடருகிறது)
- வீட்டை சுற்றி நிழல் தரும் மரங்களை வளர்க்க இடம் விடுங்கள்.
- காற்றாடிகளை முடிந்தளவுக்கு இறக்கி தொங்க விடுங்கள்.
No comments:
Post a Comment