Monday, April 16, 2012

வாங்குவதும் கொடுப்பதும்

நல்லவனாய் இரு. ஆனால் அப்பாவியாய் இராதே. விவரமாய் இரு. விழிப்பாய் இரு. ஒரு பொருளை வாங்கும்போது, "உனக்கு என்ன வேண்டும்" என்பதில் தெளிவாய் இரு. உனக்கு வேண்டியது இருக்கிறதா என்பதை சோதித்து வாங்கு. எடுத்துக்காட்டாக, போட்டோ வாங்கும்போது, வெள்ளைநிற பேக்கிரவுண்ட், தேவையான அளவுகளை குறித்து எடுத்து செல். அதை வாங்கும்போது அவை இருக்கிறதா என சோதித்து பார்.

காசை கொடுக்கும்போது, குறைந்த பட்சம் அது எப்படி கணக்கிடப்பட்டுள்ளது என்பதை தெரிந்து கொள். நீ ஒரு தடவை அதை போட்டுப்பார். அடுத்தது அது சரியான விலை தானா என்பதை உறுதி செய்.
வீட்டிலிருந்து கிளம்பும்போதே ஆகக்கூடிய காசை கணக்கிட்டு எடுத்துச் செல்வது, நீ ஏமாறுவதை தடுக்கும். பேரம் பேசக்கூடிய திறனை வளர்க்கும்.

No comments:

Post a Comment