Monday, April 16, 2012

வீட்டின் முக்கிய அம்சங்கள்

வீட்டின் முக்கிய அம்சங்கள்:
  1. சூரிய மின்சக்தி
  2. வெப்பத்தை தாங்கவல்ல வீடு (குளிர்ச்சியான வீடு)
  3. கொசுவலை அடிக்கப்பட்ட வீடு
  4. நிலநடுக்கத்தை தாங்க கூடிய வீடு
  5. லேசான வீடு
  6. குறைந்த செலவிலான வீடு
  7. தோட்டத்துடன் கூடிய வீடு
  8. பலமாடிகளை தாங்ககூடிய அளவுக்கு அஸ்திவாரம் பலமான வீடு
  9. வாகனங்கள் நிறுத்த வசதியான வீடு
  10. சாதாரண சிமென்ட் தரை 
  11. கழிவு நீர் சுத்திகரிக்கப்பட்டு செடிகளுக்கு பயன்படும் வீடு
  12. மழை நீர் சேகரிக்கும் வீடு
அஸ்திவாரம் எப்பொழுதும் போல பரவாயில்லை. மரங்களை வளர்க்கும்போது, சுற்றுச் சுவற்றையோ, அஸ்திவாரத்தையோ பதம் பார்க்காத வகையில் மரம் நடும் இடத்தில் வட்டமான உருளைகளை பதித்தோ, நீளமான கல் தகடுகளை இருபுறமும் பதித்தோ வேரின் போக்கை கட்டுப்படுத்தலாம்.
அடுத்து, எத்தனை மாடிகள் வேண்டுமோ, அத்தனை மாடிகளை எலும்புக்கூடு போன்று பிள்ளர்களை வைத்து உருவாக்கிக் கொள்வது நல்லது. இப்பொழுது, நிலநடுக்கத்தை தாங்கக் கூடிய அளவில், குறைந்தது மூன்று நான்கு மாடிகளைத் தாங்க கூடிய அளவில், கனமான கம்பிகளை பயன்படுத்த வேண்டும். பிள்ளர்களுக்கான அடிப்படைகள்:
நிலநடுக்கத்தை தாங்க:(ஆராய்ச்சி தொடர்கிறது)

குளிர்ச்சியான வீட்டிற்கு:
சிலாப்களை வெளியில் நீட்ட கம்பி பொருத்தவும். சிலாப்களில் மெலிதாக தண்ணீர் தேங்குமளவிற்கு ஓரங்களை தூக்கி வடிவமைக்கவும். வெய்யில் காலங்களில் தண்ணீர் ஊற்ற/தேங்க வசதியாக இருக்க வேண்டும். பில்லர் வரும் இடத்தில் மட்டும் சிலாப்களில் இடைவெளி விடவும். சுவற்றை ஒட்டி குழாய்கள் மற்றும் வயர்கள் இறங்க ஏதுவாக இருக்கும். கூரை ஒட்டும்போழுதே எப்பொழும் போல வயரிங் குழாய்களை பொருத்தி விடவும். ஒவ்வொரு அறைக்கும் மூன்று (நடுவில் காற்றாடி, இரண்டு ஓரங்களிலும் LED விளக்கு) வளைவான கம்பிகள் மற்றும் பவர் சாக்கெட் பொருத்தவும். பெரிய அறைகளுக்கு ஐந்து பொருத்தவும். தொங்கு விளக்குகளை பயன்படுத்தி, சுவற்றில் விளக்குகளை பொருத்தாத அளவிற்கு செய்யவும்.

செங்கல் சுவருக்கு மாற்றாக சுவர்களை வடிவமைக்கும்போது வீட்டின் உள்பக்கமாக சிலாப் அமைக்க முடியுமா என கேட்டுத் தெரிந்து கொள். முடியாத பட்சத்தில் மாற்று ஏற்பாடுகளை பற்றி சிந்திக்கவும். எடுத்துக் காட்டாக, ஒவ்வொரு அறையிலும் பெரிய மர அலமாரிகளை அமைத்து அதன் மீது கூட பொருட்களை ஏற்றிக்கொள்ளலாம். மாற்றுச் சுவர்களை சிந்திக்கும்போது ஆணி அடிக்க முடியுமா என கேட்டுத் தெரிந்து கொள். மேலும் மின் சாதனங்களை உட்பக்கமாக பதிக்க முடியுமா என தெரிந்து கொள்.(முடியாத பட்சத்திற்கு ஒரே ஒரு முன்பக்க சுவரை மட்டும் செங்கல்லில் வைத்துக்கொள்ளுமாறு டிசைன் செய்யவும்)
மாற்றுச்சுவர்கள்:
  1. Hollow Blocks
  2. LMC(Lightweight Construction Methods) using Foam Concrete (FC)/Cellular Lightweight Concrete (CLWC)

No comments:

Post a Comment