இறைவனடி சேர்ந்தார் வாழ்க்கை கடலை எளிதாக கடக்கின்றார் என்று வள்ளுவம் பகல்கின்றது. ஆனால், இதுவரை இறைவன் ஒரு மறைபொருளாகத்தான் இருந்திருக்கின்றார். இருந்துகொண்டு இருக்கிறார். மறைபொருளாக இருப்பவனை எப்படிப் பற்றுவது? அவனைப் பற்றுவதற்கான அறிவை அவனே எனக்கு அளிக்கவில்லை. இந்த சாதாரண அறிவிற்கு கண்கூடாக கண்டவற்றை மட்டுமே நம்பும் சக்தி உள்ளது.
இப்படி நினைக்கும் போதுதான், சமீப காலங்களில் கண்கூடாக வாழ்ந்து மறைந்த ஞானியர், மக்களுக்கு நம்பிக்கைத் தரும் கலங்கரை விளக்கமாக ஒளி வீசுகின்றனர். "இதுதான் நிதர்சனம்! இதுதான் வாழ்வின் பொருள்!!" என நூறு வீதம் நிதர்சனமாக வாழ்ந்து காட்டியவர்கள். போலிக்கு அப்பாற்ப்பட்டவர்கள். நாம் எந்த உண்மையைத் தேடி ஓடுகின்றோமோ, அந்த உண்மையே மனித உருவாய் வந்து வாழ்ந்து காட்டுகின்றது.
அப்படி, நான் பற்றிய ஒரு உண்மைதான் "ரமண மகரிஷி". எப்படி திருவண்ணாமலை அவரை தானாக அழைத்ததோ, அதுபோலத்தான் ரமணமும் எனக்குள் தானாக, கொஞ்சம் கொஞ்சமாக வந்து நிறைந்தது. இதோ என்னைச் சுற்றியிருந்த போலியான் பழக்கங்கள் போலியான நினைவுகள் கொஞ்சம் கொஞ்சமாக விலகிக்கொண்டிருக்கின்றன. நான் எந்தளவுக்கு ரமணரை மனதுக்குள் நிரப்பி வைத்திருக்கின்றேனோ அந்தளவுக்கு நான் தேடிய நிறைவு கிடைக்கிறது. தெளிவு பிறக்கிறது. பயமும் குற்ற உணர்ச்சியும் விலகுகிறது. அடுத்து என்ன செய்ய வேண்டும் எனத் தெளிவாய் தெரிகிறது. என்ன செய்தேனோ அதில் திருப்தி கிடைக்கிறது. என்னைச் சார்ந்தவர்களிடமும் ஒரு இணக்கமான சூழல் பரவுகிறது. எல்லாவற்றையும் "ரமணார்ப்பணம்" என முடிக்கும்பொழுது வாழ்வின் நிதர்சனத்தை புரிந்து கொண்டு அடுத்த அடி எடுத்து வைக்க முடிகிறது.
"ரமணர் எனது வாழ்வின் கலங்கரை விளக்கம்".