Monday, April 30, 2012

மழலைக் கவிதைகள்

ஹைக்கூ

வெட்டும் நகத்திலும்
களையும் தாடி முடியிலும்
ஒரு வலி.
என் பிஞ்சுக் குழந்தையை பிரிந்து
தொலைதூரத்தில் நான்.

 

ஒன்று சொல்லுங்களேன்!

"அம்மா!.. அம்மா!!"
"அப்பா!..அப்பா!!"
"ஒன்று சொல்லுங்களேன்!"
"எது முதலில் வந்தது..!?
பெற்றோர் 'பிள்ளைகள் காப்பக'த்தை
தேடியதா? அல்லது, பிள்ளைகள்
'முதியோர் இல்ல'த்தை தேடியதா?"

நான் கேட்டேனா?

பிஞ்சு பேசியது அதியசமாய்.
"அம்மா! அம்மா!! என்னை
விட்டுட்டு போகாதீங்க!"
"ஆயாவிடம் சமத்தாய் இருடா, செல்லம்!
அம்மா உனக்காகத்தான் சம்பாதிக்கப்
போகிறேன்" - அம்மாவின் குரல்.
"நான் கேட்டேனா?" - இது பிஞ்சு.

Sunday, April 29, 2012

சும்மா இருங்கள்!

உங்களால் சும்மா இருக்க முடிகிறதா? நீங்கள் நிச்சயமாக வாழ்வில் வெற்றி பெறுவீர்கள்.

நான் தினமும் குறைந்தது இருபது தடவைகள் இன்டர்நெட்டில் நியூஸ் பார்த்து விடுவேன். ஏதாவது செய்ய வேண்டுமென்றால், உடனே எங்கேவாவது ஏதாவது செய்திகள் புதிப்பிக்கப் பட்டுள்ளனவா என்று தேடி தேடி செய்திகளை படிப்பதுதான் ஒரே மன ஆறுதல். அது மனஅழுத்தத்தை குறைப்பதற்கு பதில், என்னை மனதளவிலும் உடலளவிலும் சோர்வடைய செய்வதையே நாளடைவில் உணர்ந்தேன். காலணா பிரயோசனமில்லை என்றாலும் எதற்கு அந்த செய்திகளை தேடி தேடி படிக்க வேண்டும் என்று தோன்றியது? என்னை அறியாமலேயே நான் அதில் அடிமையாகி விட்டதை உணர்ந்தேன். இப்படித்தானே குடிகாரர்களும் புகைப்பவர்களும். அவர்கள் குடிக்க செல்லும் நேரத்தில் அல்லது புகை பிடிக்க செல்லும் நேரத்தில் சும்மா கொட்டாவி விட்டுக் கொண்டு படுத்து கிடந்தால் பிரச்சினையே இல்லைதானே? ஏன் சும்மா இருக்க முடியவில்லை? சும்மா இருப்பது அவ்வளவு கடினமா? கண்டிப்பாக. குரங்கு மனதை வைத்துக் கொண்டு, சும்மா இருப்பது கடினம்தான்.

எனக்கு பயன்படாதவற்றை செய்யத் தோன்றும் நேரத்தில், சும்மா இருப்பதாக முடிவெடுத்தேன். தற்போது செய்திகளை காலையில் ஒரு தடவை மட்டும் படிக்கிறேன். யாரைப் பற்றியோ செய்திகளை அதற்கு மேல் படிப்பதில் எனக்கென்ன பிரயோசனம்? சும்மா படுக்கும் நேரத்தில், நான் செய்வதற்காக காத்திருக்கும் எத்தனையோ வேலைகள் என் கண் முன்னே வருகின்றன. எனக்குத் தேவையான தொழில்நுட்பம் சம்பந்தமான செய்திகளை அதிகளவில் படிக்கக் கற்றுக் கொண்டேன். தேவையில்லா குப்பைகளை ஒதுக்கித் தள்ளியதால் தேவையானவற்றை சேர்த்துக் கொள்ள என் மூளையில் நிறைய இடம் கிடைத்துள்ளது. அப்துல் கலாம் சொல்கிறார். "நான் திரைப்படங்களை பார்ப்பதே இல்லை. அதனால் நான் இழந்தது ஒன்றுமே இல்லை".

இந்த இளம் ஞானியை பாருங்கள்! ஸ்ரீ ரமண மகரிஷி! அவர் சும்மா இருந்தார். சும்மா இருப்பது அவ்வளவு கடினம்.


Saturday, April 21, 2012

http://www.tubetamil.com/entertainment-videos/wedding/%E0%AE%87%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D.html

Writing Read Configuration Register in Flash of Armadillo-440

    Outport(2, 0xA0012384, 0x60)
                           ~~~~~~(Read Configuration Register content << 1)
    Wait(1)
    Outport(2, 0xA0012384, 0x03)
                           ~~~~~~(Read Configuration Register content << 1)
    Wait(1)
    Outport(2, 0xA0000000, 0xff) // Flash to read mode
    Wait(1)

Flash is Numonyx PC28F256P30BF. To check the flash register contents from debugger, memory map the flash to some other area and write the commands in that. Since, Flash is configured as Read-only in some debuggers, they may not allow direct write. Or, write using the debugger scripts which do not know that the address are is Flash. Make sure that the Cache is configured as Write-Through.

Friday, April 20, 2012

Why High end technologies do not fit for Indians?

They do not stop talking on mobile phones till air hostess personally warns. Almost all mobile phones will ring immediately after the flight landed irrespective of the pilot's warning.

You can see the latest induction stove in almost all houses, but they have increased the power shortage too, around 6 hours power-cut per day.

AC buses in India got fire more frequently than ordinary buses, with severe casualties than the ordinary ones.

Construction of medians and fly-overs spoils the road more, and results much more chaotic.

If you happen to go to bank, you can see there will be Token Display, but repaired long before.

Why does the traffic policeman/policewoman need to stand in automatic traffic signals? If there is an policeman/policewoman, why are the automatic traffic signals needed? And, the automatic traffic signals rests on holidays.


Thursday, April 19, 2012

எதற்கு உனக்கு வேலை வேண்டும்?

எதற்கு ஒரு வேலையே தேடி ஓடுகிறாய்? அடுத்தவன் கொடுக்கும் ஒரு வேலையே செய்யத் தெரிந்த உனக்கு தானாகவே ஒரு வேலையே செய்யத் தெரியாதா? அதற்குத் லேட்டஸ்ட் தொழில்நுட்பம் தெரிந்திருக்க வேண்டுமா? சொல்லிக் கொடுத்திருக்க வேண்டிய கல்லூரிகள் சொல்லித் தரவில்லையா? அல்லது, தொழில்நுட்பத்தை சொல்லித் தந்தாலும், தானாக தொழில் தொடங்குவதை ஊக்குவித்திருக்க மாட்டார்கள். வேலை கிடைத்து விட்டதா என்றுதான் கேட்பார்களே ஒழிய, வேலை தொடங்கி விட்டாயா என்று யார்தான் கேட்பார்கள். நீயாக ஒரு வேலையை செய்யக் கற்றுக் கொடுக்காத படிப்புக்கு பெயர் ப்ரொபெஷனல் படிப்பா? தொழில்நுட்பம் வேண்டுமானால் வா.. நான் கற்றுத் தருகிறேன். போய் தொழிலை ஆரம்பி.
வேலை கிடைக்கவில்லை என்று மட்டும் வராதே. அசையத் தெரிந்த அனைத்திற்கும் இப்புவியில் வேலை உள்ளது. "வேலை இல்லை" என்றால் "உனக்கு ஒன்றுமே செய்யத் தெரியாது" என்று அர்த்தம். உனக்கு என்னதான் செய்யத் தெரியும்? அதை செய்.. போ.
கற்பி ! ஒன்றுசேர் !! புரட்சிசெய்  !!! என்பது எல்லாவற்றுக்கும் பொருந்தும்.

பெற்றோர்களே! உங்கள் குழந்தைகளுக்கு சிறு வயதிலிருந்தே நிறைய வேலை கொடுங்கள். அல்லது, நிறைய வேலைகளை செய்ய கற்றுக் கொடுங்கள். எந்தக் குழந்தையை பார்த்தாலும் "உனக்கு என்ன செய்யத் தெரியும்?", "ஓய்வு நேரங்களில் என்ன செய்கிறாய்?" எனக் கேட்க பழகிக் கொள்ளுங்கள். "எனக்கு நன்றாக பாடத் தெரியும்", "நான் நன்றாக விளையாடுவேன்", "நான் நன்கு மரம் ஏறுவேன்", "ஓய்வு நேரங்களில் செடி வளர்க்கிறேன்", "என் பெற்றோர்களுக்கு உதவி செய்வேன்", "நான் நன்றாக சமைப்பேன்" என எது வேண்டுமானாலும் பரவாயில்லை. ஒவ்வொரு பருவத்திலும் வயதுக்கேற்ற இரண்டு, மூன்று வேலைகளை செய்ய அவர்கள் பக்குவப் பட்டிருக்க வேண்டும். இயற்கையாகவே அவர்களுக்கு எதில் நாட்டம் இருக்கிறது? எதில் திறமை இருக்கிறது? என்று பாருங்கள். அதில் அவர்களை பிரகாசிக்க விடுங்கள். தொழில்களுக்குள் பேதம் புகுத்துவது நீங்களே. சிறு வயதிலிருந்தே நம் பிள்ளை என்னென்ன செய்யப் போகிறான் என சிந்தியுங்கள். படிப்படியாக நீங்கள் சிந்திப்பதை நிறுத்திக் கொண்டு அவர்களை சிந்திக்க விடுங்கள். அவர்களுக்கு அந்த சுதந்திரத்தை கொடுங்கள். உயர்கல்வி முடித்த பிறகு திடீரென்று ஒருநாள் உட்கார்ந்து நம் பிள்ளை என்ன படிக்க வேண்டும் என யோசிக்காதீர்கள். படித்து முடித்தவுடன் இன்னும் வேலை தேடிக் கொண்டிருக்கிறான் என்று சொல்லாதீர்கள். கம்ப்யூட்டர் படித்து விட்டு வேலை தேடிக் கொண்டிருக்கும் ஒரு பிள்ளையை விட, முறையாக விவசாயம் செய்து அழகாக வாழ்ந்து கொண்டிருக்கும் ஒரு பிள்ளைதான் முறையாக வழிநடத்தப் பட்டிருக்கிறான்.

அதுபோல் படிப்பு என்பது வெறும் புத்தகப் படிப்பு மட்டும் போதாது. அன்றாட நிகழ்வுகள் பற்றிய பொது அறிவு, வார, மாத பத்திரிக்கைகள் மூலம் அறியக்கூடிய பொது அறிவு, பிற மொழித்திறன் முதலியவையும் மிக அவசியம். பிற்காலத்தில் ஒன்றை விட்டால் மற்றொன்றை பிடிக்கக் கூடிய ஆற்றலும், துணிச்சலும், தன்னம்பிக்கையும் இருப்பது மிக அவசியம். அதனால் பெற்றோர்கள் குழந்தைகளின் கற்றலில் தங்களையும் ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும். தரமற்ற ஊடகங்கள் மலிந்து விட்ட இக்காலத்தில், குழந்தைகளுக்குத் தேவையான செய்திகளை சேகரித்து அவர்களுக்கு அறியத் தருவது, பொது நிகழ்ச்சிகளுக்கு அழைத்துச் செல்வது, தரமான பத்திரிக்கைகளை படிக்க ஊக்கமூட்டுவது, எந்தந்த துறைகளில் சாதிக்க என்னென்ன செய்வது என்பது பற்றிய அறிவை வளர்த்துக் கொள்வது, சாதகமான இரண்டு மூன்று துறைகளை தேர்ந்தெடுத்துக் கொண்டு, அவற்றை நோக்கி குழந்தைகளை வழி நடத்துவது முதலியவை அவற்றில் அடங்கும். இந்த செயல்திட்டத்தில் குழந்தைகளை சக நண்பனாக இருந்து வழிநடத்த வேண்டுமே தவிர, அவர்களை திட்டுவதோ அடிப்பதோ கூடாது. அதே சமயம், குறிப்பிட்ட இடைவெளிகளில் அவர்களுடைய வளர்ச்சியை கண்காணிப்பது, எல்லாவற்றிலும் அவர்களுடைய கவனம் இருக்குமாறு, தினந்தோறும் அவர்களுடைய நேரத்தை பிரித்துக் கொடுத்து ஊக்கப் படுத்துவது மிக அவசியம். தேர்வுக்கு முதல் நாள் அமர்ந்து அவர்களை சோதிப்பது என்பது உங்களுடைய குறைபாடையே காட்டும்.

நான் தஞ்சாவூரில் படிக்கும் பொழுது தங்கியிருந்த வீட்டில் எங்கு பார்த்தாலும் மணிவேலைப்பாடுகளுடன் கூடிய அழகிய பொருட்களை பார்க்கலாம். அனைத்தும் அந்த முதலாளி அம்மா செய்தவை. வேலை முடித்த மதிய நேரங்களில் எப்பொழுதும் கையில் ஊசி, நூல், மணிகள், சுவெட்டர்களுடன் அவர்களை பார்க்கலாம். உயர்ந்த அரசுப் பணியில் இருந்து ஓய்வுப் பெற்ற முதலாளி அய்யா ஓய்வு நேரங்களில் தச்சுத் தொழிலில் ஈடுப்பட்டிருப்பதைப் பார்க்கலாம். சமீபத்தில் நான் படித்த ஒரு கட்டுரையில் "இந்தியாவில் உபயோகமான பொழுதுப் போக்கு என்பது மிகவும் குறைவு. இதனால் அவர்கள் இழக்கும் தொழில்நுட்ப அறிவு மிக அதிகம். நான் தற்போது செய்து கொண்டிருக்கும் இந்த தொழில் முழுக்க முழுக்க என்னுடைய பொழுதுப் போக்கிலிருந்து வந்தது. நான் சிறு வயதிலிருந்தே மின்னணுவியலில் மூழ்கியிருந்தேன். எனக்குத் தெரிந்த வல்லுனர்கள் கல்லூரி வயதிற்கு முன்பிருந்தே அந்த துறைகளை கரைத்துக் குடித்திருந்தார்கள். புகழ்பெற்ற பொறியாளர் ஜிம்மி வில்லியம்ஸ் பற்றித் தெரியுமா? அவர் உயர் கல்வி படிக்கும்பொழுது மின்னனுவியலைப் பற்றி தெரிந்து கொள்ள டிவி கடையில் வேலை பார்த்தார். மேலும் தான் வேலைக்கு செல்லும் காலம் முழுதும் கூட தன்னுடைய வீட்டில் அதற்கான அறையை ஒதுக்கி தன்னுடைய முயற்சியை தொடர்ந்தார்" என்று கூறப்பட்டுள்ளது. ஆக்கப்பூர்வமான, அதாவது, ஓய்வு நேரங்களில் அறிவை வளர்க்ககூடிய, ஆரோக்கியத்தை வளர்க்கக்கூடிய, வருமானத்தை வளர்க்கக்கூடிய, தனது கலைத்திறனை வெளிப்படுத்தக் கூடிய, தனது திறமைகளை பயன்படுத்தும் வகையில், தனது திறமைகளை வளர்த்துக்கொள்ளும் வகையில் பொழுதுப் போக்கை வளர்த்துக் கொள்ளுங்கள்.



ஏன் கம்ப்யூட்டர் தொழில் அடிக்கடி அடி வாங்குகிறது?

ஏனென்றால், கம்ப்யூட்டர் உலகத்தில் எதுவுமே உண்மையானவை அல்ல. எப்பொழுதெல்லாம் பெரும்பாலான மனிதர்கள் உண்மையானவற்றை நோக்கி ஓடுகிறார்களோ அப்பொழுதெல்லாம் கம்ப்யூட்டர் தொழில் அடி வாங்குவதாக செய்தி வரும்.  அதானால்தான் அதற்கு "சைபர்" வேல்ட் எனப் பெயர் வைத்தான். கம்ப்யுட்டரில் அப்லோட் செய்யும் போட்டோக்களில் உள்ள சிரிப்புக்கள் போலி. இவன் அனுப்பும் ஸ்மைலி போலி. இவன் உம்மென்று அமர்ந்து கொண்டு ஸ்மைலி அனுப்புகிறான். போட்டோ எடுப்பது தெரிந்ததுமே ஒருவன் சிரிப்பு போலியாகி விடுகிறது.

ஆறாவது நிலம்

தமிழருக்கு ஐந்து வகை நிலங்கள் இருந்தன.
கடலும் கடல் சார்ந்த இடமும் - நெய்தல்
உழவும் உழவு சார்ந்த இடமும் - மருதம்
மலையும் மலை சார்ந்த இடமும் - குறிஞ்சி
காடும் காடு சார்ந்த இடமும் - முல்லை
மணலும் மணல் சார்ந்த இடமும் - பாலை
அதுபோல் தற்போது ஆறாவது நிலம் ஒன்று உள்ளது. வேலையும் வேலை சார்ந்த இடமும். அதுதான் ஜப்பான். வாழ்க்கை முழுதும் அங்கேயே. உண்டு, உறங்கி, இத்யாதி, இத்யாதி...

Monday, April 16, 2012

வீட்டின் முக்கிய அம்சங்கள்

வீட்டின் முக்கிய அம்சங்கள்:
  1. சூரிய மின்சக்தி
  2. வெப்பத்தை தாங்கவல்ல வீடு (குளிர்ச்சியான வீடு)
  3. கொசுவலை அடிக்கப்பட்ட வீடு
  4. நிலநடுக்கத்தை தாங்க கூடிய வீடு
  5. லேசான வீடு
  6. குறைந்த செலவிலான வீடு
  7. தோட்டத்துடன் கூடிய வீடு
  8. பலமாடிகளை தாங்ககூடிய அளவுக்கு அஸ்திவாரம் பலமான வீடு
  9. வாகனங்கள் நிறுத்த வசதியான வீடு
  10. சாதாரண சிமென்ட் தரை 
  11. கழிவு நீர் சுத்திகரிக்கப்பட்டு செடிகளுக்கு பயன்படும் வீடு
  12. மழை நீர் சேகரிக்கும் வீடு
அஸ்திவாரம் எப்பொழுதும் போல பரவாயில்லை. மரங்களை வளர்க்கும்போது, சுற்றுச் சுவற்றையோ, அஸ்திவாரத்தையோ பதம் பார்க்காத வகையில் மரம் நடும் இடத்தில் வட்டமான உருளைகளை பதித்தோ, நீளமான கல் தகடுகளை இருபுறமும் பதித்தோ வேரின் போக்கை கட்டுப்படுத்தலாம்.
அடுத்து, எத்தனை மாடிகள் வேண்டுமோ, அத்தனை மாடிகளை எலும்புக்கூடு போன்று பிள்ளர்களை வைத்து உருவாக்கிக் கொள்வது நல்லது. இப்பொழுது, நிலநடுக்கத்தை தாங்கக் கூடிய அளவில், குறைந்தது மூன்று நான்கு மாடிகளைத் தாங்க கூடிய அளவில், கனமான கம்பிகளை பயன்படுத்த வேண்டும். பிள்ளர்களுக்கான அடிப்படைகள்:
நிலநடுக்கத்தை தாங்க:(ஆராய்ச்சி தொடர்கிறது)

குளிர்ச்சியான வீட்டிற்கு:
சிலாப்களை வெளியில் நீட்ட கம்பி பொருத்தவும். சிலாப்களில் மெலிதாக தண்ணீர் தேங்குமளவிற்கு ஓரங்களை தூக்கி வடிவமைக்கவும். வெய்யில் காலங்களில் தண்ணீர் ஊற்ற/தேங்க வசதியாக இருக்க வேண்டும். பில்லர் வரும் இடத்தில் மட்டும் சிலாப்களில் இடைவெளி விடவும். சுவற்றை ஒட்டி குழாய்கள் மற்றும் வயர்கள் இறங்க ஏதுவாக இருக்கும். கூரை ஒட்டும்போழுதே எப்பொழும் போல வயரிங் குழாய்களை பொருத்தி விடவும். ஒவ்வொரு அறைக்கும் மூன்று (நடுவில் காற்றாடி, இரண்டு ஓரங்களிலும் LED விளக்கு) வளைவான கம்பிகள் மற்றும் பவர் சாக்கெட் பொருத்தவும். பெரிய அறைகளுக்கு ஐந்து பொருத்தவும். தொங்கு விளக்குகளை பயன்படுத்தி, சுவற்றில் விளக்குகளை பொருத்தாத அளவிற்கு செய்யவும்.

செங்கல் சுவருக்கு மாற்றாக சுவர்களை வடிவமைக்கும்போது வீட்டின் உள்பக்கமாக சிலாப் அமைக்க முடியுமா என கேட்டுத் தெரிந்து கொள். முடியாத பட்சத்தில் மாற்று ஏற்பாடுகளை பற்றி சிந்திக்கவும். எடுத்துக் காட்டாக, ஒவ்வொரு அறையிலும் பெரிய மர அலமாரிகளை அமைத்து அதன் மீது கூட பொருட்களை ஏற்றிக்கொள்ளலாம். மாற்றுச் சுவர்களை சிந்திக்கும்போது ஆணி அடிக்க முடியுமா என கேட்டுத் தெரிந்து கொள். மேலும் மின் சாதனங்களை உட்பக்கமாக பதிக்க முடியுமா என தெரிந்து கொள்.(முடியாத பட்சத்திற்கு ஒரே ஒரு முன்பக்க சுவரை மட்டும் செங்கல்லில் வைத்துக்கொள்ளுமாறு டிசைன் செய்யவும்)
மாற்றுச்சுவர்கள்:
  1. Hollow Blocks
  2. LMC(Lightweight Construction Methods) using Foam Concrete (FC)/Cellular Lightweight Concrete (CLWC)

கூலான வீடு கட்டுவது எப்படி?

கூலான வீடு கட்டுவது எப்படி?

  1. High ceiling: வீட்டின் கூரையை நன்றாக உயர்த்திக் கட்டுங்கள். அளவு:(ஆராய்ச்சி தொடருகிறது)
  2. மேற்கூரையின் அடியில் காற்று வெளியேற வசதியாக அதிக அளவில் ஓட்டை வையுங்கள். ஒரு அறைக்கு குறைந்தது இரண்டு அல்லது மூன்று காற்று வெளியேற்று கருவிகளை பொருத்தினால்(Exhaust Fans), கூரைக்கு அடியில் உள்ள சூடான காற்றை வெளியேற்றி குளிர்ந்த காற்று ஜன்னல் வழியாக அறைக்குள் நுழைய ஏதுவாகும்.
  3. மதிய வெய்யில் சுவர்களில் படாதபடி, வீட்டின் திசையை பொருத்து, வீட்டின் மேற்கூரையை வெளியில் நீட்டுங்கள். வீடு கட்டுவதற்கு முன்னால், சுமார் 11 மணியிலிருந்து நான்கு மணி வரை எந்த அளவுக்கு சூரியன் சாய்வாக எந்த திசையில் விழுகிறது? எந்த அளவுக்கு வெளியில் நீட்ட வேண்டும் என்று கணக்கெடுத்துக் கொள்ளுங்கள்.
  4. வீட்டின் வெளிப்புற பூச்சு, சூரிய ஒளியை பிரதிபலிக்கும் வண்ணம், மிகவும் லைட்டான வண்ணங்களில் இருக்கவும். வெள்ளை மிகவும் நல்லது.
  5. முடிந்த அளவுக்கு, வீட்டின் குறுக்கு நெடுக்காக நான்கு திசைகளிலும் ஜன்னல்களை அமையுங்கள். வீட்டின் குறுக்கே காற்றோட்டத்தை அதிகப்படுத்தி, கூலாக வைத்திருக்க உதவும்.
  6. வீட்டின் வெளியே சூரிய ஒளி அதிகம் விழும் திசையில், மாடிப்படி, வாகனங்கள் நிறுத்தும் கொட்டகை முதலியவற்றை அமைத்துக் கொள்ளுங்கள். நீங்கள் வசிக்கும் இடத்தை கூலாக வைத்துக் கொள்ள உதவும்.
  7. வீட்டின் மேற்கூரை திறந்த வெளியில் இருக்குமாயின், சனல் சாக்குப் பைகளை விரித்து, காலையும் மாலையும் தண்ணீர் விடுங்கள். உங்கள் வீட்டுக்கூரை வெப்பத்தை உறிஞ்சுவதை தடுக்கும்.
  8. வீட்டின் உட்புறம், அதிகளவு வெப்பத்தை உறிஞ்சும் செங்கல் மற்றும் கான்க்ரிட் சுவர்களை அமைத்துக் கொண்டு, வெளிப்புறம் வெப்பத்தை உறிஞ்சாத சுவர்களை அமைத்துக்கொள்ளுங்கள். (ஆராய்ச்சி தொடருகிறது)
  9. வீட்டை சுற்றி நிழல் தரும் மரங்களை வளர்க்க இடம் விடுங்கள்.
  10. காற்றாடிகளை முடிந்தளவுக்கு இறக்கி தொங்க விடுங்கள்.

வாங்குவதும் கொடுப்பதும்

நல்லவனாய் இரு. ஆனால் அப்பாவியாய் இராதே. விவரமாய் இரு. விழிப்பாய் இரு. ஒரு பொருளை வாங்கும்போது, "உனக்கு என்ன வேண்டும்" என்பதில் தெளிவாய் இரு. உனக்கு வேண்டியது இருக்கிறதா என்பதை சோதித்து வாங்கு. எடுத்துக்காட்டாக, போட்டோ வாங்கும்போது, வெள்ளைநிற பேக்கிரவுண்ட், தேவையான அளவுகளை குறித்து எடுத்து செல். அதை வாங்கும்போது அவை இருக்கிறதா என சோதித்து பார்.

காசை கொடுக்கும்போது, குறைந்த பட்சம் அது எப்படி கணக்கிடப்பட்டுள்ளது என்பதை தெரிந்து கொள். நீ ஒரு தடவை அதை போட்டுப்பார். அடுத்தது அது சரியான விலை தானா என்பதை உறுதி செய்.
வீட்டிலிருந்து கிளம்பும்போதே ஆகக்கூடிய காசை கணக்கிட்டு எடுத்துச் செல்வது, நீ ஏமாறுவதை தடுக்கும். பேரம் பேசக்கூடிய திறனை வளர்க்கும்.

Thursday, April 5, 2012

Howto add/delete IPv6 address in WindowsXP

① Command Prompt:
C:/>

② "netsh" command

>netsh
netsh>

③ "inerface" command
netsh>interface
netsh interface>

④ "show interface" command
netsh interface>show interface

Admin State    State          Type             Interface Name
-------------------------------------------------------------------------
有効                            専用               1394 接続
有効                            専用               ローカル エリア接続 2
有効                            専用               ワイヤレス ネットワーク接続
有効                            専用               ローカル エリア接続
有効                            ループバック           ループバック
有効                            内部               内部

⑤ "ipv6" command
netsh interface ipv6>

⑥ "add address "ローカル エリア接続 2" 2001::3" command
OK

add route 2001::3/64 "ローカル エリア接続" command

⑦ "del address "ローカル エリア接続 2" 2001::3" command
OK